ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By VM
Last Updated : புதன், 13 மார்ச் 2019 (20:13 IST)

ரூ.50 ஆயிரம் வரை ரொக்கமாக தனிநபர் எடுத்து செல்ல தடை இல்லை: தேர்தல் ஆணையர் தகவல்

50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் ரொக்கமாக தனிநபர் எடுத்து செல்ல எந்தவித தடையும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகே விளக்கம் அளித்துள்ளார்.


 
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத, சாகு கூறுகையில் , ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் நாளில் மதுரை சித்திரை திருவிழா நடப்பதால் ஏற்படும் சிக்கல் குறித்து இன்று மாலை மதுரை மாவட்ட ஆட்சியரிடமிருந்து அறிக்கை கிடைக்கப்பெறும். இந்த அறிக்கை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
 
இடைத்தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளின் வழக்கு விவரங்கள் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது .
 
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து இதுவரையில் மொத்தமாக ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆவணங்கள் இல்லாமல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும்.  702 பறக்கும் படைகளும் 702 கண்காணிப்பு குழுக்களும் தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் அதிகப்படியான பண பரிவர்த்தனை பெற்றால் அது பற்றி தகவல் தெரிவிக்க வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளோம் என்றார். மேலும்
 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் ரொக்கமாக தனிநபர் எடுத்து செல்ல எந்தவித தடையும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.