தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு: திமுக அதிரடி

Anna
Last Modified செவ்வாய், 12 மார்ச் 2019 (11:07 IST)
கடந்த ஞாயிறு அன்று மக்களவை தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம், 21 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவிப்பதற்கு பதிலாக 18 சட்டமன்ற தொகுதிக்கு மட்டுமே தேர்தல் என அறிவித்தது. இதற்கு நீதிமன்ற வழக்கையும் தேர்தல் ஆணையம் காரணமாக கூறியது
இந்த நிலையில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் என்பது தேர்தல் ஆணையும் செய்யும் சதி என குற்றஞ்சாட்டிய திமுக, இதுகுறித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க போவதாக நேற்று அறிவித்திருந்தது

இந்த நிலையில் தமிழகத்தில் 18 தொகுதிகளோடு விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :