வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (09:22 IST)

இரட்டை இலை யாருக்குன்னு மோடிதான் முடிவு செய்வார்!? – திருநாவுக்கரசர் பதில்!

Thirunavukarasu
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து அதிமுகவில் இழுபறி நீடிப்பது குறித்து காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், உடனடியாக திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு, காங்கிரஸிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்றும் முடிவும் செய்யப்பட்டுவிட்டது.

ஆனால் அதிமுக கூட்டணியில் யார் போட்டியிடுவார் என்பது இன்னும் குழப்பமாகவே இருந்து வருகிறது. எடப்பாடி – ஓ பன்னீசெல்வம் பிரச்சினையை வைத்து பாஜக உள்ளே வந்து போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.


இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் “அதிமுக பிளவுண்டு கிடக்கிறது. அதில் யார் போட்டியிடுவர் என்பதை அதிமுக கட்சியினராலேயே முடிவு செய்ய முடியவில்லை. அவர்களுக்கு சின்னம் கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. யாருக்கு இரட்டை இலை சின்னம் என்பதை மோடி, அமித்ஷாதான் முடிவு செய்வார்கள்.

அதிமுகவின் இந்த குழப்பம் எங்களுக்கு சாதகமாக உள்ளது. மேலும் கடந்த ஒன்றரை வருட திமுக ஆட்சி மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெறுவார்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K