வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (14:17 IST)

இன்னும் இரண்டு மாதத்தில் சசிகலா விடுதலை – தங்க தமிழ்ச்செல்வன் பேச்சால் பரபரப்பு !

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி பெங்களூர் சிறையில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்னும் இரண்டு மாதத்தில் வெளியே வரப் போகிறார் என்று தங்க தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கான தண்டனைக் காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. ஆனால் அவர் இன்னும் இரண்டு மாதங்களில் வெளியில் வருவார் என அமமுக வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அக்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அவர், சின்னம் எப்போதுமே பெரிதில்லை. மக்கள் நல்லவர்களுக்குதான் ஓட்டுப் போடுவார்கள். இன்னும் இரண்டு மாதங்களில் சசிகலா விடுதலை ஆகி வெளியே வர இருக்கிறார்’. எனக் கூறியுள்ளார்.