செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2019 (17:36 IST)

’’ஜெயலலிதாவுக்கு அல்வா கொடுத்து கொன்றார்கள் ’’ -சி.வி. சண்முகம் ஆவேசம்

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா  கடந்த  5 டிசம்பர் 2016 அன்று மறைந்தார். அவரது மறைவுக்கான காரணத்தைப் பற்றி முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தற்போது விசாரித்து வருகிறார்.பல அறியப்படாத செய்திகள் மற்றும் மர்மங்கள் ஜெயலலிதாவின் இறப்பில் இருப்பதாக பகரும் புகார் கூறினார்கள்.
இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஜெயலலிதாவின் மரணம் குறித்து  கூறியதாவது:
 
சக்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று கூறி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் சர்க்கரை நோயுள்ள அவருக்கு இனிப்புகள் கொடுத்து கொன்றுள்ளார்கள். அதனால் தான் அங்கு மரணமடைந்துவிட்டதாக கூறினார்கள். இவ்வாறு தெரிவித்தார்.
 
ஏற்கனவே ஜெயலலிதாவின் மரணத்துக்கு சசிகலா தரப்பினரையும் அதிமுகவினர்  சிலரையும்  சி.வி சண்முகம் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.