1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thanga tamilselvan comment against Jayakumar

அவர் நட்டு கழன்றவர் ; ஜெயக்குமாரை விளாசிய தங்க தமிழ்ச்செல்வன்

Jayakumar
அமைச்சர் ஜெயக்குமார் நட்டு கழன்றவர் எனவும், பதவிக்காக சசிகலா காலில் விழுந்தவர் எனவும் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.


 

 
சசிகலா பரோலில் வெளிவந்தும், சிறை நிர்வாகம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அரசு விதித்த கட்டுப்பாடு காரணமாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் யாரும் அவரை சந்தித்து பேசவில்லை. 
 
இந்நிலையில் இன்று செய்தியாளரிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் “தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால், அதை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
 
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கண்டிப்பாக எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். எடப்பாடி அரசு விதித்த கட்டுப்பாடு காரணமாகவே எங்களால் சசிகலாவை சந்தித்து பேச முடியவில்லை” எனப் பேசினார். 
 
அப்போது ஒரு நிருபர் அவரிடம் ஜெயக்குமார் கூறிய ஒரு கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன் “ ஜெயக்குமார் ஒரு நட்டு கழன்றவர். அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பதவிக்காக சசிகலாவின் காலில் விழுந்து கெஞ்சியவர்தான் ஜெயக்குமார்” என அவர் கருத்து தெரிவித்தார்.
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
டெங்கு நோயாளிகளை கொன்றுவிடுவேன் என மிரட்டிய செவிலியர்கள்