டாஸ்மாக் மதுபான விலை திடீர் உயர்வு: குடிமகன்கள் சோகம்
தமிழக அரசு டாஸ்மாக் மதுபான விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் குடிமகன்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சற்றுமுன்னர் அமைச்சர்கள் கூட்டம் கூடியது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்றுதான் இந்த மதுபான விலையேற்றம்
மதுபான விற்பனையின் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு 180 மி.லி. கொண்ட மதுபான விலை ரூ12ம், பீர் பாட்டிலின் விலை ரூ.5ம் உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஒருசில டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலான விலையில் ஊழியர்கள் விற்பனை செய்வதாக புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த விலையேற்றம் அதிருப்தியை தருவதாக குடிமகன்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர்.