1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (13:32 IST)

அப்பாடா... தங்கத்துக்கு ஒருவழியா கழகத்தில் பதவி போட்டுக்கொடுத்த தலைமை!!

அப்பாடா... தங்கத்துக்கு ஒருவழியா கழகத்தில் பதவி போட்டுக்கொடுத்த தலைமை!!
திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. 
அதிமுகவில் இருந்து விலகி தினகரன் துவங்கிய அமமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மனகசப்பால் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
 
அவர் கட்சியில் இணைந்து சில மாதங்கள் ஆகியும் அவருக்கு எந்த ஒரு பதவியும் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று அவருக்கு திமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 
அப்பாடா... தங்கத்துக்கு ஒருவழியா கழகத்தில் பதவி போட்டுக்கொடுத்த தலைமை!!
ஏற்கெனவே திருச்சி சிவா, ஆ ராசா ஆகியோர் அப்பதவியில் இருக்கும் நிலையில் மூன்றாவதாக தங்கத்துக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கழகத்தின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வழங்கினார்.
 
அதேபோல அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கலைராஜனுக்கும் இலக்கிய அணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.