தொடர்புடைய செய்திகள்
- கணவர் இறந்த துக்கத்தில் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்தக் கூடாது; வேல்முருகன் அதிரடி
- காவிரி விவகாரம்; தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்
- காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சினைகளுக்காக நடிகர்-நடிகைகள் போராட்டம் நடத்த முடிவு
- ஐசிஐசிஐ வங்கி சி.இ.ஓ கணவரிடம் சிபிஐ திடீர் விசாரணை! மேலும் ஒரு வங்கி மோசடியா?
ஐ.பி.எல் போட்டி நடத்தக்கூடாது ; வீரர்களை சிறைபிடிப்போம் : தமிமுன் அன்சாரி
நாளை சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடைபெற்றால், மைதானத்தில் நுழைந்து கிரிக்கெட் வீரர்களை சிறைபிடிப்போம் என ஆளுங்கட்சி ஆதரவு எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
இந்நிலையில் இதுபற்றி இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆளுங்கட்சி ஆதரவு எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி “ திமுக சார்பில் நாளை நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தில் பங்கு பெறுவோம். சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை தமிழக அரசு ரத்துசெய்ய வேண்டும். மீறி நடத்தினால், மனிதநேய ஜனநாயகக் கட்சியினரும், காவிரி உரிமை மீட்புக் குழுவினரும் மைதானத்தில் நுழைந்து போட்டியை நிறுத்துவோம். அதன் பிறகும் போட்டி தொடர்ந்தால், ஐபிஎல் வீரர்களை சிறை பிடிப்போம்” என அதிரடியாக அறிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
