வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 ஜூன் 2018 (13:21 IST)

ஏங்க உளறாதீங்க, பிரணாப் முகர்ஜி பிரதமர் வேட்பாளரா?-ஆத்திரமடைந்த தம்பித்துரை

கரூர் ஈத்ஹா பள்ளி வாசலில், கரூர் மாவட்ட அ.தி.மு.க வின் சிறுபான்மை பிரிவு சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்து, இஸ்லாமியர்களுடன் சேர்ந்து இப்தார் நோன்பில் பங்கேற்றனர்.




இந்நிகழ்ச்சிக்குபின் செய்தியாளர்களை சந்தித்த, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியதாவது:-

அ.தி.மு.க கட்சியானது அனைத்து மதத்தினரையும், சம வாய்ப்பு ஏற்படுத்த இன்றும் பாடுபடுகின்றது. மேலும், முத்தாலாக் பிரச்சினையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அ.தி.மு.க எதிர்த்ததோடு, அந்த பிரச்சினை மற்றும் சட்டம் இன்று என்ன இருக்கின்றதோ, அதுதான் இருக்க வேண்டுமென்று குரல் எழுப்பினோம். முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில், எப்படி சிறுபான்மையினருக்கு நல்ல வகையில் செயல்பட்டு கொண்டிருந்ததோ, அந்த அளவிற்கு நாங்கள் இம்முறையும் பாடுபடுவோம் என்றார். மேலும் தொடர்ந்து மத்திய அரசு, சிறுபான்மையினருக்கு எதிராகவே, மத்திய அரசு செயல்பட்டு கொண்டிருக்கின்றதே, என்று கூறிய போது, இந்த கேள்வியை நீங்கள் (செய்தியாளர்கள்) மத்திய அரசை தான் கேட்க வேண்டுமெண்டுமே தவிர, என்னை கேட்பதில் அர்த்தமில்லை, என்றதோடு, சிறுபான்மைபிரிவு சமுதாயத்திற்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால், அதற்காக போராடுவது அ.தி.மு.க கட்சிதான் என்றார்.

மேலும் அவர் கூறியபோது, ஒ.பி.எஸ்., இ.பி.எஸ் தேர்வு குறித்து பொதுக்குழு எடுத்த முடிவு தான் தேர்தல் ஆணையமும் அறிவித்துள்ளது. திவாரகரன் புதிய கட்சி ஆரம்பித்துள்ளது குறித்து,. கேட்டபோது, அது அவர்களுடைய சொந்த முடிவு, யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், அது அவர்களுடைய முடிவு என்றார். இதை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக்க, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க முடிவெடுத்துள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆத்திரமடைந்த தம்பித்துரை., ஏங்க உளறாதீங்க, அவர் முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதியாக இருந்தவர் பிரதமராக அதாவது மேல் மட்ட பதவியிலிருந்து கீழ் மட்ட பதவிக்கு போக மாட்டார்.,? என்றார்.


சி.ஆனந்தகுமார்