1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 8 ஜூன் 2018 (11:32 IST)

ஆர்எஸ்எஸ் நிறுவனர் தேச புதல்வரா? பிரணாப் முகர்ஜிக்கு கண்டனம்!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆண்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவரும் காங்கிரஸ் கட்சியையும் சேர்ந்த பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டுள்ளார்.
 
இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இந்த அழைப்பு குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. ஆனால், பல எதிர்ப்புகளையும் மீறி அவர் இந்த விழாவிற்கு சென்றுள்ளார். 
 
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் இயக்க தலைவர் மோகன் பாகவதத்தை சந்தித்தார். அதன்பின் இருவரும் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார் பிறந்த இடத்தில் மரியாதை செலுத்தினார்கள். 
 
அதன் பின்னர் பின்வருமாறு பேட்டியளித்தார். அதில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார் பிறந்த இடத்தில் இருப்பதில் பெருமை கொள்கிறேன். பாரத தாயின் புதல்வன் அவர். அவருக்கு என்னுடைய அஞ்சலிகள் என்று தெரிவித்தார். இவரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.