வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜூலை 2018 (17:17 IST)

யாருங்க அது தீபா?

கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், தமிழகத்தில் 5 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஜெயல்லிதா தேர்வு செய்திருந்தார்.  மத்திய அரசு  காலதாமதமாக எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்துள்ளது.  அதற்கான   காரணத்தை பாஜகவினர்,  மத்திய அரசுதான் சொல்ல வேண்டும் என்றார்.



தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுறுவியுள்ளனர் கூறி வரும் பொன் ராதாகிருஷ்ணன் அதை தடுக்க மத்திய அரசிடம் என்ன கோரிக்கை விடுத்தார் என்று கேள்வி எழுப்பினார். தமிழகம் வந்த பாஜக தேசியத் தலைவர் அமீத்ஷா தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது எனக் கூறியுள்ளது குறித்து கேட்டபோது,    80 ஆண்டு கால மத்திய அரசில் பல ஊழல்கள் ஏற்பட்டுள்ளன.  ஊழல் எனக் கூறி ஆட்சிக்கு வந்த பாஜக ஊழல் வாதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.   2 ஜி,  நிலக்கரி ஊழல், ரயில்வே துறை உள்ளிட்ட துறையில் ஏற்பட்ட ஊழல் தொடர்பாக  யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  2 ஜி வழக்கில் அப்பீல்கூட  செய்யவில்லை என்றார்.



அதிமுக அரசு மத்திய அரசுடன் நட்பாகவே இருக்கிறது். ஆனால் பாஜக தலைவர் ஆட்சியை குறை கூறுவதை ஏற்க முடியாது. ஊழலை நிரூபிக்கட்டும். லோக் ஆயுக்தா குறித்த ஸ்டாலின் சட்டசபையில் பேசாமல்,  வெளியில் வந்து பேசுகிறஆர்.  திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் தர தயாராக உள்ளானர் என்ற கூறிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,

ஒரே நாடு ஒரு மொழி,  ஒரே தேர்தல் என தமிழகத்தின் உரிமைகளை பறிக்கிறார்கள் என்றார்.    ஜெ.  தீபா சட்ட ரீதியாக கட்சியை பைப்பற்றுவேன் எனக் கூறி வருவது குறித்து கேட்டபோது, தீபா யார் என்றே எனக்கு தெரியாது என்றார்.

சி.ஆனந்தகுமார்