மறுபிறவி எடுத்த நாளை ஆரவாரத்துடன் கொண்டாடிய பாஜக அமைச்சர்

bjp
Last Modified வெள்ளி, 13 ஜூலை 2018 (10:46 IST)
உத்திரபிரதேச அமைச்சர் ஒருவர் தான் கண்டத்தில் இருந்து தப்பித்து உயிர்பிழைத்த நாளை பூஜை செய்து ஆரவாரமாக கொண்டாடியுள்ளார்.
உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் நந்த் கோபால் குப்தா என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அன்று முதல் அந்த நாளை அவர் மறுபிறவி எடுத்த நாளாகவே கருதி வருகிறார்.
 
இந்நிலையில் அந்த சம்பவம் நடைபெற்ற நாளான நேற்று, அவர் பூஜை செய்து கொண்டாடினார். தன்னை பிடித்த பாவங்கள் அனைத்தும் விலக வேண்டும் என வேண்டிக்கொண்டார். இந்த நிகழ்வை அப்பகுதி மக்கள் பலர் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :