திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (17:00 IST)

ஒத்திவைக்கப்பட்ட TET தேர்வின் புதிய தேதி அறிவிப்பு

TET exam
ஆசிரியர் தகுதி தேர்வு என்று கூறப்படும் டெட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பர் 10 முதல் 15 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
 இந்த நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது 
 
மேலும் தேர்வு கால அட்டவணை அனுமதி சீட்டு வழங்கும் தேதி குறித்த தகவல் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது