தலைமை ஆசிரியர்களே தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம்: பள்ளிக்கல்வித்துறை
தலைமை ஆசிரியர்களே தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இல்லம் தேடி கல்வித்திட்டங்கள் தயாரிப்பு பணி மொழிபெயர்ப்பு பணி மென்பொருள் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாக பள்ளிகல்வித் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது
182 தற்காலிக ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர் மேலும் ரூ.7,500,ரூ.10,000,ரூ.12,000 என்ற தொகுப்பூதியத்தில் தற்கால ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது