புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 22 நவம்பர் 2019 (08:29 IST)

தென்காசி ”பட்டணம்” இல்ல.. இனி மாவட்டம்!!

தென்காசி இன்று முதல் புதிய மாவட்டமாக உதயமாகிறது.

தமிழகத்தில் செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக உதயமாகின்றன. இதில் முன்னதாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்டிருந்த தென்காசி இன்று முதல் தனி மாவட்டமாகிறது.

இந்நிலையில் இன்று தென்காசி மாவட்டத்திற்கான தொடக்க விழாவில் முதல்வர் பழனிசாமி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.80 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார் என கூறப்படுகிறது.