செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 7 ஜனவரி 2018 (17:34 IST)

ரிவர்ஸ் எடுக்க தெரியாமல் ஒரே இடத்தில் ரவுண்ட் அடித்த தற்காலிக டிரைவர்: வைரல் வீடியோ!!

ஊதிய உயர்வு, நிலுவை தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 4 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
போக்குவரத்து உழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு இயக்கப்படுகிறது. இதனால், ஆங்காங்கே பேருந்துகள் விபத்துள்ளாவது நடந்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் நடந்துள்ளது. 
 
இந்நிலையில், திருச்சி மணப்பாறையிலிருந்து கடலூர் செல்லும் பேருந்தை தற்காலிக ஓட்டுநர் இயக்கினார். பேருந்தை ரிவர்ஸ் எடுக்க தெரியாமல் திணறிய அவர் ஒரே இடத்தில் ஒரு மணி நேரமாக ரவுண்ட் அடித்தார். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 
 
பேருந்தை ரிவர்ஸ் கூட எடுக்க தெரியாத ஒப்பந்த தொழிலாளர்கள் வைத்து அரசு பேருந்துகளை இயக்குகிறது. இவர்களை நம்பி எப்படி பயணம் செய்வது என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

நன்றி: News 18