திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2017 (07:13 IST)

விடிய விடிய கனமழை: 7 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

திருச்சி, தஞ்சை, திருவாரூர், நெல்லை, கன்னியாகுமர், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ஏழு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவித்துள்ளனர்.

மேலும் கனமழை காரணமாக இன்று நடைபெறவிருத நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக் கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் நேற்றிரவு முதல் மழை பெய்து வந்தபோதிலும் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது