செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2017 (11:10 IST)

பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை

திருச்சி அருகே பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 43 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம் மேலவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ்(48), இவரது மனைவி பழனியம்மாள். கடந்த 2013 ஆம் ஆண்டு காமராஜின் மனைவி வீட்டில் இல்லாத போது, பெற்ற மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வேறு யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டி, மகளை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைபற்றி தெரியவந்ததும் பழனியம்மாள் காமராஜரை கண்டித்துள்ளார். உன்னை கொலை செய்து விடுவேன் என காமராஜ் தனது மனைவியை மிரட்டியுள்ளார்.
 
இதுகுறித்து பழனியம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து போலீஸார் வழக்குப்பதிந்து காமராஜை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காமராஜிற்கு 43 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி திருச்சி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்பளித்துள்ளது.