திருவண்ணாமலை, திருச்சி, திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம்: பக்தர்கள் கரகோஷம்

Last Modified சனி, 2 டிசம்பர் 2017 (18:18 IST)
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தினத்தன்று திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்த தீபத்தை காண தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவதுண்டு.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் சற்றுமுன்னர் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கரகோஷமிட்டனர்.

திருவண்ணாமலையில் மட்டுமின்றி திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவிலிலும், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீதுள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :