திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 10 மே 2021 (19:19 IST)

கொரோனா கால அவசரத் தேவைக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு !

கொரொனா தொற்றுக் கால ஊரடங்கில் அவசரத் தேவைகளுக்கு 24 மணிநேர தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது சென்னை காவல்துறை.

தமிழகத்தில் கொரொனாவால் நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அந்தவகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் என்ற அரசாணை முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.

இந்நிலையில்  தற்போது, கொரொனா தொற்றுக் காலத்தில் அவசரத் தேவைகளுக்கு 24 மணிநேர தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது சென்னை காவல்துறை.

அதில், 994981 81236 , 94981 81239 ஆகிய எண்களுக்கு அழைத்து அறிவிக்கலாம் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.