வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (14:06 IST)

எல்லா சனிக்கிழமையும் ஸ்கூல் வெக்க வேண்டாம்! – ஆசிரியர்கள் வேண்டுகோள்!

கொரோனா தளர்வுகளை தொடர்ந்து பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்த வேண்டாம் என ஆசிரியர் சங்கத்தினர் அமைச்சரிடம் மனு அளித்துள்ளனர்.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளன. தற்போது 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடந்து வரும் நிலையில் விரைவில் 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா காரணமாக நீண்ட காலமாக மூடப்பட்டிருந்ததால் பாடங்களை நடத்த சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி சுமை அதிகரிப்பதாக அமைச்சர் செங்கோட்டையனுக்கு அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.