திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (10:55 IST)

பிரதமர் அய்யா.. வலிமை அப்டேட் குடுக்க சொல்லுங்க! – கூட்டத்துக்குள் புகுந்த அஜித் ரசிகர்கள்!

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பார்ப்பவர்களிடம் எல்லாம் வலிமை அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்கள் தற்போது பிரதமரிடமே அப்டேட் கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்ட நிலையில் எந்த விதமான அப்டேட்டும் வெளியாகததால் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு அடிக்கடி படக்குழுவினரை கேட்டு வந்தனர்.

ஆனால் தற்போது சமீப காலமாக பார்க்கும் முக்கிய பிரமுகர்களிடம் கூட வலிமை அப்டேட் கேட்க தொடங்கிவிட்டனர். கிரிக்கெட் மைதானத்திற்கு கூட சென்று கிரிக்கெட் வீரர்களிடம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள் பிரதமரையும் விட்டுவைக்கவில்லை.

நேற்று பிரதமர் மோடி சென்னை வந்த நிலையில் சாலையின் இருபுறமும் மக்கள் கூட்டமாக காத்திருந்து பிரதமரை வரவேற்றனர். அந்த கூட்டத்தில் புகுந்த அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் குறித்த பலகையை தாங்கிய படி பிரதமர் வாகனம் தாண்டி செல்கையில் வலிமை அப்டேட் கேட்டு கூட்டமாக கத்தியிருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.