திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (12:26 IST)

வேலைவாய்ப்பு புதுப்பிக்கும் எங்கள் அண்ணன்.. – வடிவேலு காமெடி போல பேனர் வைத்த இளைஞர்கள்!

தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பை புதுப்பித்தவருக்கு பேனர் அடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் படித்த பட்டதாரி இளைஞர்கள் பலர் உள்ள நிலையில் வேலை வாய்ப்புக்காக பலர் தமிழக அரசின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் கல்வி தகுதியை பதிவு செய்து வருகின்றனர். இதை ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. ஆனால் எத்தனை முறை புதுப்பித்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே அரிதாக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக வேலை கிடைப்பதாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு பதிவு மூப்பை புதுப்பித்தவருக்கு நூதன பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் பதிவு மூப்பை 24வது முறையாக வெற்றிகரமாக புதுப்பித்த ஆனந்தராஜூக்கு வாழ்த்துகள் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நலம் விசாரித்து கூட இதுவரை கடிதம் வரவில்லை என பின்குறிப்பையும் இட்டுள்ளனர் வேலையில்லா இளைஞர்கள் என இறுதியில் குறிப்பிட்டுள்ளவர்கள். இந்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.