ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
2022-23ம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாகவும், மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த 4ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையால் உத்தவிடப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த கலந்தாய்வு (தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி) நிறுத்தப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது!
இது குறித்து வெளியான அறிவிப்பில் நிர்வாக காரணங்களுக்காக பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்றும் கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவல் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva