திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஏப்ரல் 2023 (07:30 IST)

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

ஒவ்வொரு கல்வி ஆண்டு முடிந்து அடுத்த கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னர் ஆசிரியர் பணியிடம் மாறுதல் குறித்த கலந்தாய்வு நடைபெறும் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் 20223 ஆம் கல்வி ஆண்டு முடிவடைந்தது அடுத்து ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
அடுத்த கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 8-ம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த கலந்தாய்வுக்கு இன்று முதல் அதாவது ஏப்ரல் 27 முதல் மே 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர்கள் மாறுதல் பெற விரும்பினால் அவர்கள் பள்ளியில் ஓராண்டு தங்கள் பணியை முடித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva