வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (12:26 IST)

சினிமா பாட்டு எழுதியதை கண்டித்தார்..? – ஆபாச பாட விவகாரத்தில் திருப்பம்?

கன்னியாக்குமரியில் ஆபாச பாடம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட ஆசிரியர் எந்த தவறும் செய்யவில்லை என ஆசிரியர் நல சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கன்னியாக்குமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வணிகவியல் பாட ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் கிறிஸ்துதாஸ். இவர் பள்ளி மாணவர்களுக்கு அடிக்கடி ஆபாசமான பாடங்கள் சிலவற்றை நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கிறிஸ்துதாஸ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஆனால் ஆசிரியர் மீது தவறு இல்லை என்றும், அவர்மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கத்தினர் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


மேலும் சமீபத்தில் அப்பள்ளியில் நடைபெற்ற தேர்வு ஒன்றில் மாணவிகள் சிலர் கேள்விகளுக்கு பதில் எழுதாமல் சினிமா பாடல்களை எழுதி வைத்திருந்ததாகவும், அதை பலர் முன்னர் கிறிஸ்துதாஸ் படித்து காண்பித்து கண்டித்ததால் பழி நடவடிக்கையாக போலியான குற்றச்சாட்டை வைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.