தமிழ் சினிமா காமெடி நடிகரான கஞ்சா கருப்பு சென்னை போரூர் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருந்து வருபவர் கஞ்சா கருப்பு. இவர் சென்னையில் போரூர் அருகே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வீட்டு வாடகை கொடுப்பதில் இவருக்கும், வீட்டு உரிமையாளருக்கும் ஏற்பட்ட பிரச்சினை வைரலானது.
இந்நிலையில் இன்று கஞ்சா கருப்பு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை போரூரில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் அங்கு நீண்ட நேரம் காத்திருந்தும் மருத்துவர்கள் வராததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதை பார்த்த அவருடன் இருந்த மற்ற நோயாளிகளும் மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுவதாகவும், சென்னையில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருப்பதில்லை என்றும் குற்றம் சாட்டிய கஞ்சா கருப்பு, இதுகுறித்து அமைச்சர் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
Edit by Prasanth.K