1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 26 ஜூலை 2022 (18:31 IST)

ஆசிரியர் அடித்ததால் 14 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி: ஆசிரியர் கைது

arrest
14 மாணவர்களை அடித்தால் அந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்த மாணவர்களை அடித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
இந்த சம்பவம் ஒடிசா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்துள்ளது. அந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கணித ஆசிரியர் சரமாரியாக அடித்தார். இதில் 14 மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இதில் நான்கு மாணவர்களுக்கு காயம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது
 
இது குறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.