திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (13:24 IST)

டெல்லியில் ராகுல்காந்தி கைது: காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!

Rahul Gandhi
டெல்லியில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் எம்பிக்கள் 18 பேரை காவல்துறை கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது 
 
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று அமலாக்கத் துறை விசாரணை செய்து வருவதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
 
 இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி உள்பட பலர் கலந்து கொண்ட நிலையில் டெல்லி போலீஸ் ராகுல் காந்தியும் காங்கிரஸ் எம்பிக்கள் 18 பேரையும் கைது செய்துள்ளது 
டெல்லியில் பேரணியாக சென்ற காங்கிரஸ் எம்பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், தர்ணாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.