வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (09:07 IST)

அண்ணன் – தங்கை இடையே உண்டான தவறான காதல்..! வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தற்கொலை!

கர்நாடகாவில் அண்ணன் – தங்கை உறவின் முறை இடையே ஏற்பட்ட தகாத காதலால் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கர்நாடகாவின் கல்புர்கி மாவட்டம் மாகனகெர்ரே கிராமத்தை சேர்ந்தவர் 24 வயதான கொல்லப்பா. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கொல்லப்பாவும் அவரது உறவினரான சசிகலா என்ற 20 வயது பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் உறவு முறையில் கொல்லாப்பாவும், சசிக்கலாவும் அண்ணன், தங்கை உறவு. இதை சொல்லி அவர்கள் காதலுக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.


அதோடு மட்டுமல்லாமல் சசிக்கலாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க தொடங்கியுள்ளனர். இதனால் கொல்லப்பாவும், சசிக்கலாவும் வீட்டை விட்டு ஓடி கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். எனினும் தங்கள் குடும்பத்தினர் தங்களை பிரித்து விடுவார்கள் என பயந்த அவர்கள் வாட்ஸப்பில் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை வீடியோவாக ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது காதல் ஜோடியின் குடும்பத்தாரையும், நண்பர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் காதல் ஜோடிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K