வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: சனி, 9 மே 2020 (20:54 IST)

தொழிலாளர்களுக்கு இலவச அரிசி, பருப்புகள் கொடுத்து உதவிய ஆசிரியர் !!

இலாலாபேட்டையில் அரசுபள்ளி ஆசிரியரின் தாராள உள்ளம் – கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் டீக்கடை தொழிலாளர்களுக்கு இலவச அரிசி,  பருப்புகள் கொடுத்து உதவினார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், இலாலாபேட்டை, மெயின்ரோடு பகுதியில் வசிப்பவர் தங்கராஜ், இவரது இரண்டாவது மகன் த.யக்னமூர்த்தி (வயது 39), இவர், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயில்  அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை புவியியல் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில், கொரோனாவினால் வாழ்வாதாரம் இழந்துள்ள இலாலாபேட்டை பகுதியினை சார்ந்தவர்களுக்கும், அவருடைய நண்பர்கள் மற்றும் ஏழை, எளியவர்கள் என்று பலருக்கும்  ஏற்கனவே அரிசி மற்றும் பருப்பு வகைகளை கொடுத்த நிலையில், மூன்றாவது முறையாகவும் கொரோனா எதிரொலியின் காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள கட்டிடத் தொழிலாளர்கள், மேஸ்திரி, சித்தாள் மற்றும் டீக்கடை தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என்று சுமார் 8 நபர்களுக்கு தலா 10 கிலோ அரிசிகளும், ¼ கிலோ துவரம்பருப்பு, 100 கிராம் புளி, மிளகாய் தூள், மல்லித்தூள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் கொடுக்கப்பட்டது. கொரோனா நிவாரணமாக கொடுத்த இவரது செயல்களை கண்டு அப்பகுதி மக்களும், அவருடைய மாணவர்களும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.