வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 8 மே 2020 (08:52 IST)

வெளிமாநில தொழிலாளர்களுக்காக தமிழகத்தில் இருந்து கிளம்பும் ரயில்கள் குறித்த அறிவிப்பு!

தமிழகத்தில் லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக தங்கியிருந்து பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வெளிமாநில தொழிலாளர்கள் வேலையும் இன்றி தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர் 
 
இந்த நிலையில் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்ப அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று வெளிமாநில தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர் என்பதும் இதுகுறித்து ஒரு சில இடங்களில் போராட்டம் நடந்தது என்பதும், அந்த போராட்டம் தடியடி நடத்தி கலைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது அண்டை மாநிலங்களிலிருந்து வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் வெளிமாநில தொழிலாளர்களைப் அவர்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழக அரசின் பரிந்துரையின் அடிப்படையில் 7 சிறப்பு ரயில்கள் இன்று வெள்ளிக்கிழமை கிளம்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஒரு சிறப்பு ரயில் பீகார் மாநிலத்திற்கும், இரண்டு ரயில்கள் ஜார்கண்ட் மாநிலத்திற்கும், நான்கு சிறப்பு ரயில்கள் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று கிளம்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில்கள் சென்னை, கோவை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் இருந்து கிளம்ப இருப்பதாகவும் அந்தந்த மாநிலங்களுக்கு செல்பவர்கள் இதுகுறித்து ரயில்வே துறையை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக தங்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை தற்போது நிறைவேறியதை எடுத்து வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது