திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 6 மே 2020 (22:59 IST)

தொழிலாளர்களைச் சுரண்டக் கூடாது - போப் பிரான்சிஸ் கோரிக்கை

சீனாவில் இருந்து வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதனால் உலக அளவில் பொருளாதாரம் முடங்கியுள்ளது. பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அனைத்துதொழிகளும், கல்வி நிலையங்களும், பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் , பல்வேறு உலக நாடுகள் மற்றும் வல்லரசு நாடுகள்  சீனாவின் மீது வழக்கு தொடுத்து, இழப்பீடு கேட்கப்போவதாக ஏற்கனவே  அறிவித்துள்ளன.

இந்த நிலையில், போப் பிரான்சிஸ் கொரோனாவை காரணமாக்கி தொழிலாளர்களைச் சுரண்ட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று வாடிக்கன் நூலகத்தில் இருந்து உரையாற்றிய போப் பிரான்சிஸ், கொரோனா தாக்கம் அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது. அதனால், பணியாளர்களின்  கண்ணியத்தை காக்க வேண்டும் என தெரிவித்துள்ளார், மேலும், மே  1 ஆம் தேதி தொழிலாளர்ள் தினத்தன்று மக்கள் பலரும் தங்களின் கஷ்டத்தை என்னிடம் கூறினர். அதனால் மக்களை தொழிலாளர்களைச் சுரண்டக்கூடாது எனகேட்டு க் கொண்டுள்ளார்.