1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 1 மே 2017 (10:53 IST)

மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து ஆசிரியர் செய்த காம லீலைகள்!

மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து ஆசிரியர் செய்த காம லீலைகள்!

திண்டுக்கல் அருகே செவிலியராக படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு செவிலியராக 140-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில் பெரும்பாலான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
 
இந்த செவிலியர் பயிற்சி பள்ளியில் செங்கல்பட்டை சேர்ந்த ஒருவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அவர் திண்டுக்கலில் வாடகை வீடு ஒன்றில் தங்கி வந்தார். அவர் செவிலியராக படிக்கும் மாணவிகளை டியூசன் சொல்லி தருவதாக வீட்டிற்கு அழைப்பார்.
 
ஆசிரியரை நம்பி அவரிடம் டியூசனுக்கு வரும் மாணவிகளுக்கு அவர் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துவந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிரியரின் இந்த செயல் குறித்து மாணவி ஒருவர் பயிற்சி பள்ளி முதல்வரிடம் புகார் அளித்துள்ளார்.
 
அவர் திண்டுக்கல் மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனையடுத்து சம்மந்தப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகியதால் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறை இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.