1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TATA and mk stalin speech

ஃபோர்டு நிறுவனத்தை வாங்குகிறதா டாடா: முதல்வரிடம் பேச்சுவார்த்தை

டாடா
உலகின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான போர்டு நிறுவனத்தின் கிளை ஒன்று சென்னை அருகே உள்ள மறைமலை நகரில் உள்ளது. இந்த நிலையில் அந்த ஆலையை மூட போர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது 
 
இந்த நிலையில் டாடா நிறுவன தலைவர் நடராஜன் அவர்கள் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது போர்டு நிறுவனத்தை டாடா நிறுவனம் ஏற்றுக் கொள்வது குறித்த பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது
 
ஃபோர்டு நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கினால் அந்த நிறுவனத்தில் வேலை செய்துவரும் ஊழியர்களை தொடர்வது குறித்து தமிழக அரசுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
பாமகவின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது: டாக்டர் ராமதாஸ்