1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 6 அக்டோபர் 2021 (22:21 IST)

பாமகவின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது: டாக்டர் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்டநாள் கோரிக்கை தற்போது நிறைவேறி உள்ளதாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். 
 
இந்த அறிவிப்பு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
வெளிநாடு வாழ் தமிழர் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை நடைமுறைக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி!