திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 மே 2020 (13:01 IST)

இனி அனைத்து டாஸ்மாக்குகளிலும் ஆன்லைன் பரிவர்த்தனை! – டாஸ்மாக் புதிய திட்டம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகளிலும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தப் போவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச்  மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இடையே மே 7 அன்று மதுக்கடைகள் திறக்கப்பட்ட போதிலும் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்ற நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டது.

ஊரடங்கு முடிந்து மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் சமூக இடைவெளி பின்பற்றுவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பணப்பரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. செப்டம்பர் மாத இறுதிக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஆன்லைன் பணபரிவர்த்தனை முறையில் கொண்டு வரப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.