வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 15 மே 2020 (17:02 IST)

தமிழகத்தில் நாளை மதுக்கடைகள் திறப்பு: டாஸ்மாக் நிர்வாகம்!

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு. 
 
மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த 7ஆம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் திறக்கப்பட்டது என்பது தெரிந்ததே. ஆனால் 7, 8 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் திடீரென சென்னை ஐகோர்ட் உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. 
 
சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவில் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், டாஸ்மாக் வருமானத்துக்கு பதிலாக மாற்று வருமானத்திற்கு வழி தேட நான்கைந்து ஆண்டுகள் ஆகும் என்றும் , டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி உள்பட அனைத்து நிபந்தனைகளும் கடைபிடிக்க தயாராக இருப்பதாகவும், எனவே டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. 
 
அதன்படி, தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு. மேலும், சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நாளை முதல் சமூக இடைவெளியுடன் மதுபானங்களை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.