1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tasmac order to issue bill and upi payment

1000-க்கு மேல் வாங்கினா ஆன்லைன் பேமெண்ட்!.. குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டாஸ்மாக்..

tasmac
தமிழகத்தில் தவெக ஆட்சி  அமைந்தவுடன் டாஸ்மாக் தொடர்பாக பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் முதலமைச்சராக பதவியேற்றதும் பேருந்து நிலையம், கோவில் மற்றும் பள்ளிகளின் அருகில் இருந்த 707 கடைகள் மூடப்பட்டது.

அதேபோல் பாட்டிலுக்கு கூடுதலால ரூ.10 வாங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டது. ஆனாலும், சில நடைமுறை சிக்கல்களால் அதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகத்தில் மொத்தம் 4048 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில் நேரடியாக பணம் மற்றும் யுபிஐ மூலம் பணம் பெற்று மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது..

இந்நிலையில்தான், வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் விற்பனைத் தொகை ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அந்த தொகையை UPI அல்லது கார்டு மூலம் மட்டுமே பெற வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.

அதேபோல் 2027 ஜனவரி 1ம் தேதி முதல் விற்பனை தொகை ரூ.500 ரூபாய்க்கு மேல் இருந்தால் இதே நடைமுறையை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு விற்பனைக்கும் வாடிக்கையாளருக்கு பில் வழங்க வேண்டும்.. பில் வழங்காமல் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது’ எனவும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
கரூரில் விஜய் கதையை முடிச்சிருந்தா இது நடக்குமா?!.. திமுக கவுன்சிலரை தேடும் போலீஸ்...