1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tasmac income increased says tn govt

டாஸ்மாக் மூலம் ரூ.2,200 கோடி கூடுதல் வருவாய்: தமிழக அரசு தகவல்

tasmac
டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் ரூ.2,200 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்
 
கடந்த 2020-21ஆம் ஆண்டில் மொத்தமாக ரூ.33,811 கோடி டாஸ்மாக் மூலம் வருவாய் கிடைத்துள்ளதாகவும், நடப்பு ஆண்டில் மார்ச் மாதம் வரை மட்டும் ரூ.36,013 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ள இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையே இந்த தகவல் வெளிப்படுத்துகிறது.
 
 
அடுத்த கட்டுரையில்
ஏன் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது ?- அரசிடம் கேள்வி எழுப்பிய தோனியின் மனைவி