1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 25 ஏப்ரல் 2022 (23:25 IST)

மதுக்கடைகளை மூடுவது சாத்தியமா? கனிமொழி எம்.பி. விளக்கம்

kanimozi
மதுக்கடைகளை மூடுவதாக திமுக, தேர்தல் வாக்குறுதி அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம் கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் கனிமொழி எம்பி கலந்துகொண்டார். அப்போது, மாணவ, மாணவியரின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

அதில் ஒரு மாணவி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா என கேட்டார்.  இதற்குப் பதிலளித்த கனிமொழி, திமுக தேர்தல் அறிக்கையில் இதுகுறித்து வாக்குறுதி அளிக்கப்படவில்லை எனவும்னம், மதுக்கடைகளை முழுமையாக மூட முடியாது; படிப்படியாகக் குறைக்க முடியும் என பதில் கூறினார்.