திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (10:38 IST)

மதுரை மேம்பால விபத்து; கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம்!

Madurai Bridge
கடந்த ஆண்டு மதுரையில் கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்த வழக்கில் கட்டுமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் மேலூர் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை புதிய உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.