1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 25 ஏப்ரல் 2022 (17:09 IST)

சென்னையை அடுத்து மதுரையிலும் தடம் புரண்ட ரயில்: ரயில் சேவை பாதிப்பு!

train
சென்னையில் நேற்று கடற்கரை ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் தடம் புரண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மதுரை அருகே ரயில் தடம் புரண்டு விபத்து நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மதுரையை அடுத்த செல்லூர் ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரண்டதை அடுத்து மூன்று மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இதனை அடுத்து மாற்று ரயில் பாதை மூலம் சற்றுமுன் ரயில் சேவை தொடங்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சற்றுமுன் புறப்பட்டது என்றும் தடம்புரண்ட ரயில் அப்புறப்படுத்தும் பணியில் தொழில்நுட்ப குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன