வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜூலை 2020 (09:16 IST)

இனி வாரத்தில் 6 நாள் வேலைநாள்! – தமிழக அரசின் புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதால் தேங்கியுள்ள அரசு பணிகளை முடிக்க இனி வாரத்தில் 6 நாட்கள் வேலைநாட்களாக மாற்றப்பட்டுள்ளதாக சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்கள் வழக்கமாக வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் இயங்கி வந்தன. கொரோனா காரணமாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது மற்றும் சில காரணங்களால் அரசு பணிகள் தொடர்ந்து முடக்கம் கண்டு வருகின்றன.

இதை கருத்தில் கொண்டு ஊரக வளர்ச்சி துறை மற்றும் டவுன் பஞ்சாயத்து துறைகளை சேர்ந்த அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி இனி வாரத்தில் சனிக்கிழமை உட்பட 6 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணிக்குள் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள கோப்புகள், பணிகளை விரைந்து முடிக்கவும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பணியாளர்கள் வருகை பதிவை பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்ப வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.