டாஸ்மாக் மதுபானங்கள் மீண்டும் விலை உயர்வா? குடிமகன்கள் அதிர்ச்சி!
டாஸ்மாக் மதுபானங்களின் விலை கடந்த ஜூன் மாதம் உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் உயர உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி குடிமகன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களை தமிழக அரசே விற்பனை செய்து வருகிறது என்பதும் ஆண்டுதோறும் அதன் மூலம் அரசுக்கு மிகப் பெரிய வருமானம் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டாஸ்மாக் வருவாயை அதிகரிக்கும் வகையில் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்ய இருப்பதாகவும் இது குறித்து அவசர சட்டம் நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த மசோதாவை மதுவிலக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கொண்டுவந்தார். இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் மற்றும் பீர் உள்ளிட்ட பானங்களின் விலையை உயர்த்துவதற்காக மசோதா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இன்னும் ஒரு சில நாட்களில் மதுபானங்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Edited by Mahendran