1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (08:38 IST)

பால் கொள்முதல் விலை அதிகரிக்க கோரி போராட்டம்! – இன்று பேச்சுவார்த்தை!

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்தவர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிய நிலையில் இன்று பேச்சுவார்த்தை தொடங்குகிறது.

கடந்த சில காலமாக தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் பால் பாக்கெட் விலையை உயர்த்தியுள்ள நிலையில், அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினின் பால் பாக்கெட்டுகள் தனியார் நிறுவனங்களை விட லிட்டருக்கு ரூ.22 வரை குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பால் கொள்முதல் விலையை அதிகரித்து வழங்க வேண்டும், அனைத்து கால்நடைகளுக்கும் அரசு இலவச காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில் இன்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. வருகிற 26ம் தேதிக்குள் பேச்சுவார்த்தையில் தீர்வு காணா விட்டால், 28ம் தேதி பால் வழங்காமல் போராட்டம் நடத்த போவதாக பால் கூட்டுறவு சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அதேசமயம் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டால் ஆவின் பாலின் விலையும் அதிகரிக்கலாம் என மக்கள் அதிர்ச்சியில் உள்ளதாகவும் தெரிகிறது.

Edited By: Prasanth.K