முழு ஊரடங்கு நாட்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது!!
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அன்றும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என தமிழக அரசு அறிவிப்பு.
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை ஒட்டி நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. மேலும் டாஸ்மாக் இயங்கும் நேரத்தையும் குறைக்க அரசு அலோசித்து வருகிறது.
முன்னதாக இந்த ஜனவரியில் விடுமுறை நாட்கள் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஜனவரி 15 – திருவள்ளுவர் தினம், 18 - வடலூர் வள்ளலார் நினைவு தினம், 26 – குடியரசு தினம் ஆகிய 3 நாட்களுக்கும் டாஸ்மாக் கடைகள் மற்றும் அரசு அனுமதி பெற்ற பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதவிர ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அன்றும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது.