செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 28 அக்டோபர் 2021 (16:43 IST)

நஷ்டத்தில் டாஸ்மாக்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஒரு நபர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு, தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில்  டாஸ்மாக்  நிறுவனத்தின் மூலம் கிடைத்த மொத்த லாபம் ரூ.312.43 கோடி எனவும், கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயக்கி வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் கடந்த 2012- 2013 ஆம் ஆண்டு காலத்தில் ரூ.103. 64 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.