தொடர்புடைய செய்திகள்
- இந்திய ஆழ்கடலில் காற்றாலை மின்சாரம்: சிங்கப்பூர் நிறுவனம் ஆய்வு..!
- தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடையா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
- விமல் நடிக்கும் துடிக்கும் கரங்கள் படத்தின் டிரைலர் ரிலீஸ்!
- உதயநிதியின் ''கலகத்தலைவன்'' படம் இணையதளத்தில் லீக்! படக்குழு அதிர்ச்சி
- 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் எந்த அணி வெல்லும்- பிரபல வீரர் கணிப்பு
பில் கட்டலைன்னா கரண்ட் கட்! புதிய மோசடி? – மின்சார வாரியம் எச்சரிக்கை!
மின்சார வாரிய கட்டணம் கட்டாதது போல் எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்யும் கும்பல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரிய மின்கணக்கீடு மற்றும் கட்டணம் ஆன்லைனிலும், அருகே உள்ள மின்வாரிய அலுவலகங்களிலும் செலுத்தும் வசதி உள்ளது. சமீபத்தில் திமுக பிரமுகரான பத்மப்ரியாவின் தந்தையின் செல்போன் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது.
மின்சார கட்டணத்தை கட்டாததால் மின் இணைப்பு இன்று இரவு நிறுத்தப்படும் என்றும் அதற்கு முன்னால் இந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் ஒரு எண் இருந்துள்ளது. அதை தொடர்பு கொண்டபோது சிலர் இந்தியில் பேசியுள்ளனர்.
இதுகுறித்து பத்மப்ரியா ட்விட்டரில் டாங்கெட்கோவை டேக் செய்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில் டாங்கெட்கோ தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் “நுகர்வோர் கவனத்திற்கு, இந்த போலியான குறுஞ்செய்தி பரவி வருகிறது. இது போன்ற குறுஞ்செய்தி ஒருபோதும் எங்களிடமிருந்து வராது. பொருட்படுத்தாதீர்” என தெரிவித்துள்ளது.
நுகர்வோர் கவனத்திற்கு, இந்த போலியான குறுஞ்செய்தி பரவி வருகிறது. இது போன்ற குறுஞ்செய்தி ஒருபோதும் எங்களிடமிருந்து வராது. பொருட்படுத்தாதீர். #TANGEDCO #டான்ஜெட்கோ#MINNAGAM #மின்னகம்#TNEB pic.twitter.com/Xc9hO3s39B
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) November 21, 2022
அடுத்த கட்டுரையில்
